கர்த்தரை நம்பிடுங்கள் - Kartharai Nambidungal

கர்த்தரை நம்பிடுங்கள்

அவர் கைவிடவே மாட்டார்

உயிர் வாழ எதை உண்போம்

உடல் மூட எதை உடுப்போம்

என்றே கவலைப்படல் வேண்டாம்

உணவை விட உயிரும்

உடையை விட உடலும்

உயர்ந்தவை அல்லவா

வானத்துப் பறவையைப் பாருங்கள் - அவை

விதைப்பதுமில்லை அறுப்பதுமில்லை

சேர்த்து வைப்பதுமில்லை

கர்த்தர் காக்கின்றார்

கவலைப்படுவதினால்

எவன் தன் வளர்த்தியிலே

ஒரு முழம் கூட்ட முடியும்

எதை உடுப்போம் என்று

கவலையே வேண்டாம்

சொல்வதைக் கேளுங்கள்

வயல்வெளி மலர்களைப் பாருங்கள் - அவை

உழைப்பதுமில்லை நூற்பதுமில்லை

கவலைப்படுவதுமில்லை

கர்த்தர் உடுத்துகின்றார்

கர்த்தரை நம்பிடுங்கள் - Kartharai Nambidungal

Kartharai Nambidungal

Karththarai Nampidungal

Avar Kaividavaemaattar

Uyir Vaala Ethai Unnpom

Udal Mooda Ethai Uduppom

Ente Kavalaippadal Vaenndaam

Unavai Vida Uyirum

Utaiyaivida Udalum

Uyarnthavai Allavaa

Vaanaththup Paravaiyaip Paarungal

Avai Vithaippathumillai

Aruppathumillai Serththu Vaippathillai

Karththar Kaakkintar

Kavalaippaduvathinaal

Evan Than Valarththiyilae

Oru Mulam Kootta Mutiyum

Ethai Uduppom Entu

Kavalaiyae Vaenndaam

Solvathaik Kaelungal

Vayalveli Malarkalaip Paarungal

Avai Ulaippathumillai Noorpathumillai

Kavalaippaduvathumillai

Karththar Uduththukintar